Tuesday, 27 June 2017

அசோலா பற்றி அறிந்துகொள்வோம்


       அசோலா என்பது மிதக்கும் பச்சிலைகள் கொண்ட ஒரு வகைச் செடி அல்லது பெரணியாகும்.
       இதில் புரோட்டீன்,அமினோ அமிலம்,விட்டமின்கள் மற்றும் மினரல் போன்ற அனைத்து வகையான சத்துகளும் உள்ளது.
       அசோலா கறவை மாடுகளுக்குச் சிறந்த தீவனம். பசுக்களுக்குத் தினமும் இதைக் கொடுத்துவந்தால், 2 லிட்டர் கூடுதல் பால் கிடைக்கும்.
       அசோலாவைக் கால்நடைகள் ருசித்து உண்ணும். உடல் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் அமினோ அமிலங்கள், உடல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் தாதுக்களான கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, துத்தநாகம், மாங்கனீஸ், வைட்டமின்கள் போன்றவற்றையும் உள்ளடக்கிய அற்புதச் சக்தி படைத்தது அசோலா. அது மட்டுமல்லாமல் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, புரதச் சத்து நிறைந்தது
       கறவை மாடுகள் மட்டுமின்றி முயல், பன்றி, வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழி, வான்கோழி, மீன் போன்றவையும் விரும்பி சாப்பிடுவதால், எடை கூடும்.
       பாலின் தரம் அதிகரிப்பதோடு கால்நடைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
       கோழிகளுக்கு அசோலா கொடுக்கும்போது முட்டையிடுவது அதிகரித்து, உடல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.       கால்நடை வளர்ப்பில் பெரும் பங்காற்றுவதும் அதிக செலவு பிடிக்கக் கூடிய விஷயம் கால்நடைக்கான தீவனம்தான். பசுமாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு என அனைத்து வகை கால்நடை வளர்ப்புத் தொழில் லாபம் அடைய வேண்டுமென்றால், தீவனத்திற்கான செலவினை குறைக்க வேண்டும். மாற்றுத் தீவனங்கள் குறைவான விலையில் உற்பத்தி செய்து பயன்படுத்தினால் மட்டுமே தீவனத்திற்கான செலவினைக் குறைக்க இயலும்.
       இந்த மாற்றுவகை தீவனத்தில் சத்து மிகுந்ததும், எளிதில் உற்பத்தி செய்யக் கூடியதும் ஆன அசோலா தண்ணீரில் மிதக்கக் கூடிய தாவரங்களில் பிரதான இடத்தை வகிக்கின்றது.
       குறைந்த உற்பத்திச் செலவில் அசோலாவை உற்பத்தி செய்து கால்நடைகளுக்குக் கொடுக்கும்போது பாலின் உற்பத்தி செலவு குறைந்து லாபத்தின் அளவு கூடுகின்றது.

அசோலா வளர்ப்பது சுலபமானது மட்டுமல்ல, கால்நடைகளின் தீவனத் தேவையைப் பூர்த்திசெய்வதுடன், அடர் தீவனத்துக்குச் செய்யும் செலவும் குறைய வாய்ப்புள்ளது.

கறவை மாடுகளுக்குக் கொடுக்கிற அடர் தீவனமான பருத்திக்கொட்டை, தவிடு, புண்ணாக்கு போன்றவற்றைப் பாதியாகவோ அல்லது மூன்றில் ஒரு பங்காகவோ குறைத்துக் கொள்ளலாம். அசோலா உற்பத்தி செய்ய 1 கிலோவுக்கு 50 பைசாவுக்கும் குறைவாகவே செலவாகும்.
புண்ணாக்குப் பதிலானது என்பதால் புண்ணாக்கு செலவு 25-40 சதவீதம் வரை குறையும்.
         அசோலாவை கால்நடைகளுக்குத் தீவனமாக அளிப்பதால் பால் உற்பத்தி 15 முதல் 20 விழுக்காடு அதிகரிப்பதுடன் பாலின் தரமும் மேம்படுகிறது. பாலின் கொழுப்புச்சத்து 10 விழுக்காடு வரை உயருகிறது. கொழுப்புச்சத்து அல்லாத திடப்பொருளின் (SNF) அளவு 3 விழுக்காடு வரை கூடுகிறது.
       அசோலா தீவனத்தால் முட்டைக் கோழிகளில் முட்டைகளின் விளைச்சல் அதிகமாகின்றது. இதனால் 10000 முட்டைக்கோழிக்கான தீவனச் செலவு ஒரு நாளைக்கு 1000 ரூபாய் என்ற அளவு குறையும்.
       அசோலாவைத் தங்கள் தோட்டங்களிலேயே வளர்த்து கால்நடை மற்றும் கோழிகளுக்குத் தீவனமாக வழங்குவதன் மூலம் உற்பத்தி மற்றும் உடல் எடையில் முன்னேற்றம் காணலாம். மேலும் கோழி வளர்ப்பில் இடையூறாக விளங்கும் இராணிகெட் நோயினை ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம்இதன் மூலம் கோழிகளில் நோய் எதிர்ப்புத்தன்மை இருப்பதாகவும் திகழ்கிறது.
       அசோலாவை உப்புடன் சேர்த்து பன்றிகளுக்கு அளித்தால் பன்றிகள் அசோலாவை நன்றாக உட்கொண்டு அதிக எடையுடன் திகழ்கின்றன. மேலும் இறைச்சியின் தன்மையும் நன்றாக இருக்கிறது.
        கால்நடைகளுக்கு அசோலாவை கோதுமை வைக்கோலுடன் சேர்த்து அளித்தால் கால்நடைகளின் எடையும் வளர்ச்சியும் அதிகரிக்கிறது.
       இத்தாவரத்தை உண்டு வளரும் கோழியின் முட்டையானது மனிதர்களுக்கு கண் பார்வையைத் தெளிவடையச் செய்யும். இத்தாவரத்தை வளர்க்கும் இடத்தில் கொசுக்களின் தொல்லை இருக்காது. அசோலாவை கால்நடைகளுக்கு தீவனமாகவோ,   பச்சையாகவே உணவாகக் கொடுக்கலாம். உற்பத்தி அதிகமாக இருக்கும்போது நிழலில் உலர்த்தியும் (பதப்படுத்தி) சேமித்து வைத்துக் கொள்ளலாம்
       அசோலா ஆரம்பத்தில் நெற்பயிருக்கான உரமாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. தழைச்சத்து நெற்பயிரின் வளர்ச்சிக்கு இன்றியமையாது. இரசாயன உரங்களினால் கிடைத்த தழைச்சத்தை, விவசாயிகளுக்கு அதிக செலவு பிடிக்கக் கூடியதும், சூழலுக்கு மாசு விளைவிக்கக் கூடிய ரசாயன உரத்தின் தவறான பயன்பாட்டை மட்டுப்படுத்த, இயற்கையிலேயே நெல் வயல்களில் வளரக்கூடிய நுண்ணுயிர்கள் மூலமும், சில தாவரங்கள் மூலமும் கிடைக்கச் செய்ய அதிக அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
        
       அசோலா (Azolla Pinnala) எனும் நீரில் மிதந்து வளரும் தாவரத்தை நெல் வயல்களிலேயே நேரடியாக வளர்க்கலாம் என கண்டறியப்பட்டது.
       அசோலா அதிக அலைகளில்லாத, அதிக நீரோட்ட வேகம் இல்லாத அமைதியான நீர் நிலைகளில் வளரக் கூடியவை. குளங்கள், சிறு ஓடைகள், நெல் வயல்களில் வளரக்கூடிய அசோலா மிதக்கும் வகைத் தாவரம்தான் என்ற போதிலும் வயலில் சேற்றுடன் கலந்த மண் பரப்பிலும் வளரும் தன்மையுடையது.
அசோலாவில் பல வகைகள் உள்ளன.

1)      அசோலா பின்னேட்டா
2)      அசோலா மெக்சிகானா
3)      அசோலா பிலிக்குலாய்டஸ்
4)      அசோலா கரோலினியானா
5)      அசோலா மைக்ரோபில்லா
6)      அசோலா நைலோட்டிகா
தமிழகத்தில் மிகப் பரவலாக காணப்படுவது அசோலா பின்னேட்டா ரகம்தான்
       அசோலா பின்னேட்டா ரகம் அதிக தழைச்சத்தைக் கிரகிக்கும் தன்மை வாய்ந்தது. அதிக வெப்பமாக இருந்தாலும் தாங்கி நன்கு வளரும்.
       அசோலா வளர்வது வருடம் முழுவதும் இயல்பாக நடக்கக்கூடிய செயல் .
       குறைந்த ஆழம் உள்ள தேங்கிய தண்ணீரே அசோலா வளர்ப்பதற்கு ஏற்றது.
       பெரணி தாவரமான அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலையான 25°c-35°cதேவைப்படுகிறது. ஆகையால் உயர்ந்த(37°cக்கு மேல்) வெப்பநிலையில் அசோலாவின் வளர்ச்சி தடைபடுவதால் உற்பத்தி குறைகிறது. எனவே மிகவும் வறண்ட பகுதியில் இந்த தொழில்நுட்பத்தை பின்பற்றுவது கடினம்.
       மிகஅதிகமான அல்லது மிகக்குறைவான சூரிய ஒளி இத்தாவர வளர்ச்சியைப் பாதிக்கும். பொதுவாக அசோலாவானது 25-50 சதவீத வெளிச்சத்தில் நன்கு வளரும். மிகஅதிகமான அல்லது மிகக்குறைவான சூரிய ஒளி இத்தாவர வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
       எனவே போதுமான வெளிச்சம் உள்ள நிழல் பகுதி இத்தாவரத்திற்கு மிகுந்த ஏற்ற சூழல் ஆகும். இத்தாவர வளர்ச்சிக்கு தண்ணீர் ரொம்ப முக்கியம். சுமார் 4 அங்குல உயரத்தில் தண்ணீர் இருக்க வேண்டும். தண்ணீர் மட்டம் குறைவாக இருந்து இத்தாவர வேர் தரையைத் தொட்டால் இதன் வளர்ச்சி பாதிப்புதான்.
       அசோலா மாற்றுவகை தீவனத்தில் சத்து மிகுந்ததும், எளிதில் உற்பத்தி செய்யக் கூடியதும் ஆன அசோலா தண்ணீரில் மிதக்கக் கூடிய தாவரங்களில் பிரதான இடத்தை வகிக்கின்றது.
       அசோலாவான தனது எடையை 2-3 நாட்களுக்குள் இரண்டு மடங்காக பெருக்கும் ஆற்றலை உடையது. 20-30 நாட்களுக்குள் வளர்ந்து ஏக்கருக்கு 10 மெட்ரிக் டன் மகசூல் கொடுக்கும்.
       அசோலாச் செடி வளர்கின்ற விதத்தையும், வேகத்தையும் கவனித்தால் அற்புதமான அனுபவமாக இருக்கும். அதனுடைய கணுக்கள் உடைந்து சிறுசிறு துண்டுகளாகி ஒவ்வொரு துண்டும் வேர்கள் விட ஆரம்பித்து தனித்து வளரும். இவ்வளவு விரைவான வளர்ச்சியை வேறு பயிர்களில் காண இயலாது.
       இந்தத் துரித வளர்ச்சியால்தான்                        6 அடி X 4 அடி அளவுள்ள அசோலா வளர்க்கும் தொட்டியில் இருந்து தினசரி 500g-2.00kg  அளவிற்கு அசோலா அறுவடை செய்ய முடிகின்றது.
       அசோலா  உற்பத்திக்கு தேவையான பொருட்கள்:
அசோலா இழைகள், பாலீத்தீன் விரிப்பு, செம்மண் கலந்த தோட்டத்து மண், இரண்டு கைப்பிடி பாறைத் தூள் அல்லது குவாரி மண் அல்லது ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது கிடைக்கும் பாறைத் தூள்
           மற்றும் மாட்டுச் சானம்.
       விதை அசோலா என்பது இன்றுமொரு அசோலா வளர்ப்பவரிடமிருந்து வாங்கி வரும் பச்சை, புதிய அசோலாதான்
       அசோலாவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன.
       21 – 24% புரதச்சத்து (crude protein)
       9 – 21% நார்ச்சத்து (crude fibre)
       2.5 – 3% கொழுப்பு (ஈதர் எக்ஸ்ட்ராக்ட் – ether extract)
       10 – 12% சாம்பல் (Ash)
       1.96 – 5.30% தழைச்சத்து N
       0.16 – 1.59% மணிச்சத்து P
       0.31 – 5.9% சாம்பல் சத்து K
       0.45 – 1.70% சுண்ணாம்புச் சத்து
       0.22 – 0.73% கந்தகச் சத்து
       0.22 – 0.66% மெக்னீசியம்
       0.04 – 0.59% இரும்புச் சத்து
        
       தமிழில் இதன் பெயர் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என அழைக்கப்படுகிறது
       புரதச்சத்து மிகுந்த இந்தப் பாசியில் வடை, போண்டா செய்து நாமும் சாப்பிடலாம்.
       ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழுள்ள வேளாண் அறிவியல் நிலையம் அல்லது உழவர் பயிற்சி மையத்தை அணுகினால் விதைக்கான அசோலாவை எளிதில் பெறலாம். மிக எளிய தொழில்நுட்பம், குறைந்த முதலீடு, அபரிதமான மகசூல் உள்ள அசோலா வளர்ப்பு, கால்நடை வளர்ப்போருக்கு நல்லதொரு மாற்று தீவனத்தைக் கொடுக்கின்றது
அசோலா விதை விற்பனை செய்யப்படுகிறது.                            தொலைபேசி எண்:8870212008,8189955838